• Mon. Jun 24th, 2024

விழுப்புரம் மாவட்டத்திற்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்

Byவிஷா

Jun 11, 2024

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்திற்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து 8ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பொதுவாகவே ஒரு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. உயிரிழந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும்.
அந்த வகையில் இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில் ஒரே கட்டமாக கடந்த 19ம் தேதி தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெற்றது. முடிவுகள் அறிவிக்கப்பட்டு பிரதமர் நரேந்திர மோடி மோடி தலைமையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது. அதில் ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தாக்கல் ஜூன் 14-ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுதாக்கலுக்கான கடைசி நாள் ஜூன் 21-ம் தேதி ஆகும். மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24-ம் தேதி நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ் பெற ஜூன் 26 -ம் தேதி கடைசி நாள் ஆகும். அன்று தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்குப்பதிவு ஜூலை 10-ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜூலை 13ஆம் தேதி நடைபெறுகிறது. விக்கிரவாண்டி உட்பட நாடுமுழுவதும் மொத்தம் 13 பேரவை தொகுதிகளில் ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இடைத்தேர்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்திற்கு புதிய திட்டங்கள் அறிவிக்க கூடாது என்றும் கூறியுள்ள அவர், ஏற்கனவே செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு தடை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தல் விவரம்:

1) வேட்பு மனு தாக்கல் – ஜூன் 14-ம் தேதி.

2) மனுதாக்கல் கடைசி நாள் – ஜூன் 21-ம் தேதி.

3) மனுக்கள் மீது பரிசீலனை – ஜூன் 24-ம் தேதி.

4) மனுக்கள் வாபஸ் – ஜூன் 26 கடைசி நாள்.

5) இறுதி வேட்பாளர் பட்டியல்- ஜூன் 26-ல் வெளியீடு

6) வாக்குப்பதிவு – ஜூலை 10 -ம் தேதி.

7) வாக்கு எண்ணிக்கை – ஜூலை 13-ம் தேதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *