• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வழியை மறித்ததால், கிராம மக்கள் போராட்டம்..,

ByKalamegam Viswanathan

Jul 29, 2025

மதுரை மாவட்டம் திருமங்கலம் – விருதுநகர் நான்கு வழிச்சாலையில் செங்குளம் என்ற இடத்தில், நான்கு வழி சாலைக்காக சர்வீஸ் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சர்வீஸ் சாலை அமைப்பதற்கு, அப்பகுதியில் பல ஆண்டுகளாக வழிப்பாதையாக பயன்படுத்தி வரும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் செல்லும் பாதையை மறித்து, சர்வீஸ் சாலை அமைப்பதால் தங்களுக்கு வழிப் பாதை கிடைக்காது.

ஆகையால் தங்களுக்கு வழிப்பாதை அமைத்த பின்பு, சர்விஸ்சாலை அமைத்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, சர்வீஸ் சாலையை வழிமறித்து 50- க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது . இதனை தொடர்ந்து, நான்கு வழி சாலை அமைக்கும் நிர்வாக அலுவலர்களும், காவல்துறையினரும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் , செங்குளம் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

நூற்றாண்டுகளாக வாழ்வாதாரமாக கொண்டு வரும் பல்வேறு விவசாய நிலங்களையும், குடியிருப்புகளையும் அழித்து நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு அந்த கிராம மக்கள் தங்களது எதிர்ப்பினையும் தெரிவித்தனர்.