செட்டியூரணி நிரம்பினால் மாந்தாளி கிராமத்திற்கு ஆபத்து. நீர் வெளியேற வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகேயுள்ள மாந்தாளி கிராமத்து செல்லும் வரத்து கால்வாய்களை இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக, மாந்தாளி கிராம மக்களுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதில் மாந்தாளி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகிறார்கள்.

இங்குள்ள செட்டியூரணி கண்மாய் நிரம்பி அதன் உபரி நீர் அயனாகுளம் கண்மாய்க்கு செல்லும் வழியில் தற்பொழுது வளர்ந்துவரும் புறநகர்பகுதியான இங்கு, சொர்ணவள்ளி நகர், திருநகர், அருள் நகர், கேகே. நகர்கள் உருவாகியுள்ளன. இந்த குடியிருப்புகள் முன்புறம் செல்லும் குலைக்கால் அடைபட்டுள்ளன. இதனால் கண் வாய்க்கு செல்லும் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் வாய்க்கால்கள் அடைக்கப் பட்டதால் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் விளைநிலங்களுக்குள் செல்கிறது.


மேலும், மாந்தாளி கிராமத்திலுள்ள செட்டியூரணி நிரம்பினால் வெளியேறும் மழை நீர் செல்ல உடைகுளம் கண்மாய்க்குச் செல்ல வழியில்லாமல் போய்விட்டது. குலைக்கால் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் கண்மாய் நீர் வெளியேற முடியாமல் ஊருக்கு வெள்ள நீர் புகுந்துவிடும் ஆபத்து உருவாகியுள்ளது.
எனவே மாவட்ட ஆட்சியர் இப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து மறவ மங்கலத்திலிருந்து மாந்தாளி கிராமம் வரை செல்லும் தார்ச்சாலையில் இருபுறமும் உள்ள குலைக்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்மாய் நீர் தடங்களின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







