• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஆபாசமாக புகைப்படம் எடுத்த இருவரை, காவல் நிலையத்தில் ஒப்படைத்த கிராம மக்கள்…

ByP.Thangapandi

Jun 17, 2025

உசிலம்பட்டி அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த 5 சிறுமிகள், 2 சிறுவர்கள் என 7 பேரை ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டியதாக இருவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த கிராம மக்கள், தப்பி ஓடிய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உ.குளத்துப்பட்டியில் தோட்டத்து வீட்டில் வசிக்கும் 5 சிறுமிகள், 2 சிறுவர்கள் இன்று மாலை உள்ளூரில் உள்ள ஆரம்ப பள்ளிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் மது போதையில் வந்த மூன்று பேர் சிறுமிகள், சிறுவர்களை மறித்து, ஆடைகளை கலையச் சொல்லி ஆபாசமாக செல்போனில் புகைப்படம் எடுத்தாகவும், வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து சிறுவர், சிறுமிகள் வீட்டிற்கு வந்து தங்கள் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்க, அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மீண்டும் அதே வழியாக வந்த லிங்கப்பநாயக்கணூரைச் சேர்ந்த பழனி, அலெக்ஸ்பாண்டி என்ற இருவரை பிடித்து உத்தப்பநாயக்கணூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

உத்தப்பநாயக்கணூர் காவல் நிலைய போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, ஆபாசமாக புகைப்படம் எடுத்த செல்போனுடன் தப்பி சென்ற லிங்கப்பநாயக்கணூரைச் சேர்ந்த ரவி என்பவரை தேடி வருகின்றனர்.

பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமிகள், சிறுவர்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டிய சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.