சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவி ஊராட்சிக்கு உட்பட்ட சிறுமருதூர் கிராம மக்கள் சிறுமருதூர் கண்மாயை பொதுப்பணித்துறை பராமரிக்க வேண்டும். நீர்வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்புக்களை அகற்ற கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் அளித்தனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவி ஊராட்சிக்கு உட்பட்ட சிறுமருதூர் கிராமத்தில் பெரும்பாலான மக்கள் விவசாயத் தொழிலையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். சுமார் 125 ஏக்கருக்கு மேல் விஸ்தீரணம் உள்ளது சிறுமருதூர் கண்மாய், 40 ஆண்டுகளுக்கு மேல் எவ்வித பரமரிப்பும் இன்றி மிக மோசமான நிலையில் உள்ளது. 125 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் இக்கண்மாய் மூலம் நீர்ப்பாசனம் பெறுகிறது மேலும் கண்மாய்க்கு மழைநீர் வரும் வரத்துக் கால்வாய் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு தடைபட்டுள்ளது.
இந்நிலையில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் கண்மாய் தொடர்பாக புகார் அளித்த போது இந்த சிறுமருதூர் கண்மாய் (PDO) வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் கட்டுபாட்டிலோ பொதுப்பணித் துறையின் PWD நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டிலோ கண்மாய் பதிவு இல்லை. அதனால் கண்மாய் சீரமைப்பது சாத்தியம் இல்லாமல் உள்ளது என்று தெரிவிக்கிறார்கள்.
ஆனால், 100 ஏக்கருக்கு மேல் பாசன நிலம் உள்ள கண்மாய்கள் எல்லாம் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் (PWD) தான் பராமரிக்க முடியும் என்பதால் எங்கள் கண்மாயை நீர்ப்பாசன PWD அலுவலகத்தில் இணைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கோரிக்கை மனு மாவட்ட ஆட்சியர் ஆசா அஜித்திடம் வழங்கினார்கள். மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துக் கொண்டார்.
