மதுரை கிழக்கு ஒன்றியம் கொடிக்குளம் ஊராட்சி அருகே, உள்ள வௌவால் தோட்டம் ஊரணியில், 78 -வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கொடிக்குளம் ஊராட்சிமன்றத்தலைவர் திருப்பதி தலைமை தாங்கினார். இதில், துணைத் தலைவர் முத்துமீனா, ஊராட்சி செயலாளர் ஜெகநாதன், கிழக்கு துணை வட்டார வளர்ச்சி சத்துணவு அலுவலர் சரளாமாய், வார்டு மெம்பர் லெட்சுமி, சத்யா, காவல்துறை ராஜசேகரன், கிராம நிர்வாக அலுவலர் ஜான்சிராணி, செவிலியர் மீனாட்சி, கிராம உதவியாளர் செல்வம், மக்கள் நலபணியாளர் கருப்பையா, ரேஷன் கடை ஊழியர் மீனாட்சி சுந்தரம், மதுரை சமூக அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் நிஷாந்த், துப்புரவு தொழிலாளர்கள், தூய்மை காவலர்கள், கிராம மக்கள், பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.