• Fri. Apr 26th, 2024

‘ஜவாத்’ புயல் எதிரொலி-18 ரயில்கள் இன்று ரத்து

Byகாயத்ரி

Dec 3, 2021

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று மாலை புயலாக உருவாகவுள்ளது. இந்த புயலுக்கு ‘ஜவாத்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ‘ஜவாத்’ புயல் காரணமாக, சென்னை சென்ட்ரல்- ஹௌரா கோரமண்டல் அதிவிரைவு ரயில் உள்பட 18 ரயில்களின் இயக்கம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.


ஹாட்டியா-பெங்களூரு கண்டோன்மென்ட் வாராந்திர விரைவு ரயில் நாளையும் ரத்து செய்யப்படுகிறது. புவனேசுவரம்-ராமேசுவரம் வாராந்திர அதிவிரைவு ரயில் , புருலியா-விழுப்புரம் சந்திப்பு வாரம் இருமுறை அதிவிரைவுரயில் ஹவுரா-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் அதிவிரைவு ரயில் , சந்திரகாச்சி-சென்னை சென்ட்ரல் வாரம் இருமுறை அதிவிரைவு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.


மேலும், ஹௌரா- சென்னை சென்ட்ரல் அதிவிரைவு மெயில், சென்னை சென்ட்ரல்-ஹௌரா கோரமண்டல் அதிவிரைவு ரயில் , சென்னை சென்ட்ரல்-புவனேசுவரம் வாராந்திர அதிவிரைவு ரயில், சென்னை சென்ட்ரல்-ஹௌரா அதிவிரைவு மெயில், திருச்சிராப்பள்ளி-ஹௌரா வாரம் இருமுறை அதிவிரைவு ரயில் உள்பட 18 விரைவு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜார்க்கண்ட் மாநிலம் ஹாட்டியா-பெங்களூரு கண்டோன்மென்ட் வாராந்திர விரைவு ரயில் வரும் சனிக்கிழமை ரத்து செய்யப்படவுள்ளது. இதுதவிர, பெங்களூரு கண்டோன்மென்ட்-குவாஹாட்டி வாரம் மூன்று முறை அதிவிரைவு ரயில் வியாழக்கிழமை(டிச.2) ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *