• Mon. Jan 20th, 2025

சிறுதொழில் செய்யும் பெண்களிடம் வாக்கு சேகரித்தார் விஜய்வசந்த்

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோவளை ஊராட்சி ஒன்றியத்தில் சிறுதொழில் செய்து வரும் பெண்களிடம் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வாக்குகள் சேகரித்தார்.

காலை 8.00 மணிக்கு வீரப்புலி பகுதியில் இருந்து குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம் தலைமையில் நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் பரப்புரையை துவக்கி வைத்தார். தடிக்காரன்கோணம், கீரிப்பாறை, அழகியபாண்டிபுரம் பகுதியில் வாக்குகள் சேகரித்த வேட்பாளர் விஜய் வசந்த் அங்கு  கையால் அண்டி உடைக்கும் கைத்தொழில் செய்து வரும் பெண்களிடம் அவர்கள் குறைகளை கேட்டு அறிந்து துண்டு பிரசுரங்களை வழங்கி கை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் வட்டார தலைவர் செல்வராஜ்,  திமுக நிர்வாகிகள் கேட்சன், பூதலிங்கம் உட்பட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் உட்பட  தொண்டர்கள் கலந்து கொண்டனர்.