• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

விஜயின் தளபதி 67 நடிக்கும் பிரபல மலையாள நடிகர்

ByA.Tamilselvan

Oct 28, 2022

விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாகவிருக்கும் திரைப்படம் தளபதி 67. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக விஜய் நடிக்கவிருக்கிறார்.
‘விக்ரம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், ‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் மீண்டும் நடிகர் விஜய்யுடன் ‘தளபதி 67’ படத்தில் இணைவது ஏறக்குறைய உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
இந்த வருடத்தின் இறுதிக்குள் வெளியாகும் என தெரிகிறது. இப்படத்தில் திரிஷா,சமந்தா உள்ளிட்ட 3கதாநாயகிகள் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது மேலும் சஞ்சய் தத், பிரித்விராஜ், கவுதம் மேனன், அர்ஜுன் உள்ளிட்டோர் வில்லன்களாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் மிகமுக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் மலையாள திரையுலகின் சென்சேஷன் நடிகர் மாத்திவ் தாமஸ் நடிக்கப்போவதாக தெரியவந்துள்ளது.20 வயதாகும் நடிகர் மாத்திவ் தாமஸ் கும்பளங்கி நைட்ஸ், ஜோ அண்ட் ஜோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.