• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

செம ஸ்டைலிஷான லுக்கில் வாரிசு விஜய்யின் புகைப்படங்கள்

ByA.Tamilselvan

Oct 28, 2022

நடிகர் விஜய் நடிக்கும் ‘வாரிசு” படத்தின் புதிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் வாரிசு.ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா உள்பட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகயிருக்கிறது.

மேலும் ரசிகர்கள் அனைவரும் வாரிசு திரைப்படத்தின் அடுத்த அப்டேட்டை தான் எதிர்பார்த்து இருக்கின்றனர்.இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் புத்தம் புதிய புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. செம ஸ்டைலிஷான லுக்கில் விஜய்யின் அந்த புகைப்படங்கள் செம வைரலாகின.
இதற்கிடையே தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் கடைசியாக வெளியான மகரிஷி திரைப்படத்தில் நடிகர் மகேஷ் பாபு அணிந்துள்ள உடை மற்றும் காட்சிகள் வாரிசு திரைப்படத்தை போலவே இருப்பதால் இரண்டு திரைப்படத்தை ஒப்பிட்டு வருகின்றனர்.