• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இந்தியிலும் வெளியாகும் விஜயின் வாரிசு

ByA.Tamilselvan

Nov 28, 2022

பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் விஜயின் வாரிசு திரைப்படம் தமிழ் ,தெலுங்கு, மற்றும் இந்தியிலும் வெளியாகும் என தகவல்வெளியாகி உள்ளது.
தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் ‘வாரிசு’. ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கில் வெளியாகும் பைலிங்குவல் படமான இதனை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். படம் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் திரைப்படம் பற்றிய மாஸ் அப்டேடை தயாரிப்பாளர் தில் ராஜூ கொடுத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இத்திரைபப்டம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்தி மொழியிலும் வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இந்தியா முழுவதும் மிக பிரபலமான நடிகராக விஜய் உருவெடுத்துள்ளதால் வட இந்திய ரசிகர்களுக்கு ஏற்றவாறு இந்த படம் இந்தியில் டப் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.