• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

விஜயின் உரை அனல் பறக்கும் உரையாக இருக்கும்..,

ByKalamegam Viswanathan

Aug 20, 2025

மதுரையில் நடைபெறும் தமிழக வெற்றிக்காக இரண்டாம் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக விஜயின் நண்பரும் நடிகருமான ஸ்ரீநாத் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

தவெக தொண்டர்களுக்கு தலைவருக்கு என்னுடைய அன்பார்ந்த மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாநாடு மிகவும் வெற்றிகரமாக அமைவதற்கு ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

தொண்டர்கள் எவ்வளவு பேர் பங்கேற்பார்கள் என்ற கேள்விக்கு:

10 முதல் 12 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று நினைக்கிறேன் நிச்சயமாக அதிகமாக இருக்கும்.

மாநாடு தாக்கம் குறித்த கேள்விக்கு:

பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் முதலில் இருந்த மாநாட்டை விட இந்த மாநாட்டில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இதனுடைய தாக்கம் அதிகமாக இருக்கும் மக்களுடைய அன்பும் ஆதரவும் தலைவருக்கு அதிகமாக உள்ளது.

மாநாட்டில் தலைவர் உரை குறித்த கேள்விக்கு:

அனல் பறக்கும் உரையாக இருக்கும், எனர்ஜெட்டிக்காக, எக்ஸ்பிளோசிவா இருக்கும், ஹைபர் ஆக்டிவாக இருக்கும். ஹை வோல்டேஜ் நிலையைக் காண முடியும்.

மாநாட்டில் நண்பராக வந்திருக்கிறீர்களா தொண்டராக வந்திருக்கிறீர்களா என்ற கேள்விக்கு:

இரண்டுமாக வந்திருக்கிறேன்.

மாநாட்டில் ஆட்கள் புதிதாக இணைவது குறித்த கேள்விக்கு:

அது போன்ற நிறைய செய்திகள் வருகிறது. களத்தில் நடக்கும் போது தான் அது போன்ற நிகழ்வுகள் இருக்கும் போது தான் தெரியும். நானும் உங்களை போல எதிர்பார்ப்புடன் இருக்கிறேன் நல்லது நடக்கும் என நடிகர் ஶ்ரீநாத் கூறினார்.