• Fri. Jun 28th, 2024

மதுரையில் விஜய் 50 வது‌ பிறந்த நாள் விழா

ByN.Ravi

Jun 23, 2024

மதுரை வடக்கு மாவட்டத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் 50 வது பிறந்த நாள் விழா, என்.எம்.ஆர் பள்ளி அறக்கட்டளையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இனிப்புகள், பழங்கள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி வடக்கு தொகுதியின் நிர்வாகி மணி தலைமையில் நடந்தது. இதில் ராஜ பிரகதீஷ் முன்னிலை வகித்தார். நாகராஜ் வரவேற்புரை ஆற்றினார். இதனைத் தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக மதுரை வடக்கு மாவட்டத் தலைவரும் மாநிலத் துணை செயலாளருமான விஜய் அன்பன் கல்லனை கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார்.
மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் நடராஜன், விஷால், ரமேஷ், ஜெயின், ஈஸ்வர், நசீர், மணி, பாபு, கணேசன், வசந்த், சபரி, முத்துப்பாண்டி மற்றும் மாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அரவிந்த் குமார் நன்றியுரை கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *