• Fri. May 3rd, 2024

குமரி மாவட்டத்தில் விஜயதரணி பாஜக கட்சி தாவலுக்கு தொகுதியின் மகிழ்ச்சி விழா

இந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினருக்கு (பெப்ரவரி24)ம் நாள் ஒரு சிறப்பு தீபாவளி, ஓணம், ரம்சான், கிறிஸ்துமஸ் விழா போல் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வாக்காளர் அவர்களின் சமத்துவ விழா மகிழ்ச்சி போல், விஜயதரணியின் பாஜக கட்சி தாவலை கண்டு இன்று முதல் நமக்கு நல்ல நாட்கள் தொடங்கி விட்டது என்பது போல் ஒருவர், ஒருவருடன் “கை”கொடுத்தும், ஆரத்தழுவி, வணக்கம் சொல்லியும் தொகுதியை பிடித்திருந்த பீடை ஒழிந்தது என விஜயதரணி கட்சி தாவலுக்கு கண்டனம் தொகுதியின் மகிழ்ச்சி விழாவாக கொண்டாடும் நேரத்தில், கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை 6தொகுதிகளிலும் இளைஞர் காங்கிரஸ் மற்றும் மகளிர் காங்கிரஸ் பிரிவினர் பட்டாஸ் கொழுத்தியும் வான் வேடிக்கை விட்டு இனிப்பு வகைகளில் லட்டு, கேக், சாக்லேட் என பல வகை இனிப்புகளை வீடு, வீடாக கொடுத்த போதும் கவனமாக சந்தித்த ஒவ்வொரு வீட்டினரிடமும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் விஜய் வசந்திற்கு “கை” சின்னத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரிப்பு பணி, தேர்தல் அறிவிப்பு வரும் முன்னே எழுத்தறிவு பெற்ற மக்களை அதிகம் கொண்ட தென் கோடியில், கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை பாஜகவுக்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் வாக்கு கேட்ட இளைஞர்களுக்கு பொது நிலையில் பாராட்டும் கிடைக்கும் நிலையில், விளவங்கோடு தொகுதி பிரதான பகுதியில் விஜயதரணியை எதிர்த்து கண்டன கோசங்களை எழுப்பியவர்கள் போராட்டத்தை பார்த்துக் கொண்டு இருந்த பொது மக்கள் சற்றும் எதிர்பாராத நிலையில் விஜயதரணி யின் “வண்ணப் படத்தை”கொளுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் காவல்துறை தடுக்க முயன்ற காட்சிகள் பொது வெளியில் புதிய காட்சிகளாக வரிசையானது.

புலி வருது, புலி வருது என்ற பழம் கதையை விஜயதரணி இன்று பாஜக வுக்கு தாவல் குமரி மாவட்ட பொது மக்களின் ஆதரவு இல்லாதது மட்டுமல்ல வெறுப்பை வெளி படுத்தும் சூழலில், குமரி மாவட்டம் பாஜக-வினர் மத்தியில் ஒரு உற்சாகத்தை காண முடியவில்லை. இதற்கு காரணம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் விஜய தரணி பாஜகவில் சங்கமம் ஆனதால், குமரியை சேர்ந்த பொன்.விஜயராகவனுக்கு 2011_ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விளவங்கோடு சட்டசபை தேர்தலில் போட்டியிட இருந்த பொன். விஜயராகவனுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை தட்டி பறித்த சூழல் இப்போது பொன். இராதா கிருஷ்ணனுக்கு 10_வது முறையாக, கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலில் போட்டியிட இருந்த வாய்ப்பை விஜயதரணியால் தட்டி பரிக்கப்படுமோ என்ற கவலையில் குமரி பாஜகவில் பெரும்பான்மையோர் இருப்பதை குமரி மாவட்டம் முழுவதும் காண முடிகிறது.

விஜயதாரணி பாஜகவின் தேசிய தலைவர் நட்டா முன்பு பாஜகவில் இணைகிறார் என்பது ஏன் நடக்கவில்லை என்ற கேள்வி குமரி மாவட்டத்தில் உள்ள பாஜகவினர் மத்தியில் மட்டுமே அல்ல தமிழக பாஜகவினர் முன்னால் உள்ள மில்லியன் டாலர் கேள்வி, விஜயதரணி பாஜகவுக்கு கட்சி தாவல் வரமா.?சாபமா.? காலம் சொல்லப் போகும் தீர்ப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *