உசிலம்பட்டியில் மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் 2 வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு – திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இன்று தமிழக முழுவதும் மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவரது திருவுருவப்படத்திற்கு அக்கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருமுருகன் கோவில் அருகில் மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு உசிலம்பட்டி தொகுதி பொறுப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில், பொதுக்குழு உறுப்பினர் கருமாத்தூர் பாண்டி முன்னிலையில் கேப்டன் விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். மேலும் அங்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதில் நகர் அவைத்தலைவர் ராமர், மாவட்ட பிரதிநிதி போத்தி ராஜா, செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் செல்வபிரகாஷ், நகர பொறுப்பாளர் அழகுராஜா, நகர இளைஞரணி வேல்முருகன் மற்றும் செல்லம்பட்டி ஒன்றிய நிர்வாகிகள் கதிர்காமன், கருப்புசாமி, வீமன், கண்ணன், பாண்டியராஜன், சிவராமன் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் பங்கேற்றனர்.




