• Thu. Jan 8th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விஜயகாந்த் நலமுடன் வீடு திரும்புவார் திரைப்பட நடிகர் ஹரிஷ் கல்யாண் மதுரையில் பேட்டி..,

ByM.Bala murugan

Dec 4, 2023

இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகை சிந்துஜா நடிப்பில் வெளியாகி உள்ள பார்க்கிங் திரைப்பட குழுவினர் மதுரை சின்ன சொக்கிக்குளம் பகுதியில் உள்ள விஷால் டி மால் -ல் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நடத்தி ரசிகர்களுடன் திரையரங்கில் அமர்ந்து படம் பார்த்தனர். மேலும் படம் பார்க்க வந்த ரசிகர்களுடன் படத்தை பற்றி கேட்டறிந்தனர். பின்பு அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்து புகைப்படம் எடுத்து கொண்டனர். பின்பு செய்தியாளர்களிடம் திரைப்பட கதாநயகன் ஹரிஷ் கல்யான் கூறியதாவது, பார்கிங் திரைபடம் தமிழ்நாடு முழுவதும் திரையரங்கில் வெற்றிகரமாக வெளியாகி ஓடிக் கொண்டுருக்கிறது. மதுரை விஷால் டி மாலில் மதுரை மக்களை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. திரையரங்கில் ரசிகர்கள் படம் பார்க்கும் பொழு படக்குழுவினருடன் நாங்களும் சென்று பார்த்தோம். ரசிகர்கள் படத்தை மிகவும் ரசித்து பார்த்தார்கள் மிகவும் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நல்ல படத்தை மக்கள் வெற்றி படமாக்கிருக்கிறார்கள். இந்த படத்தையும் வெற்றி படமாக்க வேண்டும். அனைவரும் திரையரங்கில் சென்று திரைப்படத்தை பாருங்கள் மதுரை மக்கள் சப்போர்ட் பண்ண வேண்டும் என்றும், திருச்சி மாவட்டம் திட்டக்குடி பகுதியில் நடந்த சம்பவம் கிரிக்கெட் பற்றிய திரைபடம் , திரைப்படம் பெயர் ரப்பர் பந்த் இந்த படத்தில் நடித்து முடித்து விட்டேன் என்றும், தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நலமுடன் சிகிச்சை பெற்று வீடு திரும்புவார் என்று ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்தார்.