• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

26 தேர்தலில் நிச்சயம் விஜய் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார்..,

ByS. SRIDHAR

Nov 19, 2025

விஜய் கடந்த காலத்தில் இளைஞரணி காங்கிரஸ் தலைவராக வருவதற்கு விருப்பப்பட்டு ராகுலுடன் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான்.

26 தேர்தலில் நிச்சயம் விஜய் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார். அதில் எந்த சந்தேகமும் கிடையாது கணிசமான வாக்குகள் அவருக்கு கிடைக்கும் கணிசமான வாக்குகள் அவருக்கு கிடைக்கும்.

ஆனால் அவை வெற்றியாக மாறுமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும்
டெல்லி கார் குண்டு வெடிப்பு குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். பாதுகாப்பு குறைபாடு இருந்ததா என்பது குறித்தும் மத்திய படைகள் பயன்படுத்தும் துப்பாக்கி குண்டுகள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்பாகவும் எங்கிருந்து அந்த குண்டுகள் அவர்களுக்கு கிடைத்தது என்பது குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும். இது குறித்து நாங்கள் வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்புவோம்.

பீகாரை போன்று தமிழகத்திலும் திமுக அரசு தேர்தல் நேரத்தில் பெண்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
புதுக்கோட்டையில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் பேட்டி

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

பீகாரில் வாக்கு திருட்டு நடைபெற்றுள்ள அதற்கான டேட்டாக்கள் என்னிடம் கிடையாது அதனால் பீகாரில் காங்கிரஸ் கட்சி தோற்கவில்லை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மற்றும் கடைசி கட்டத்தில் பெண்களுக்கு பத்தாயிரம் ரூபாய் மாநில அரசு வழங்கியது போன்றவை தான் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு,

ஜனநாயக நாட்டில் எஸ் ஐ ஆர் என்பது தேவை கண்டிப்பாக அனைவரும் எஸ் ஐ ஆர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தங்களுடைய வாக்குகளை தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.

விஜய் கடந்த காலத்தில் இளைஞரணி காங்கிரஸ் தலைவராக வருவதற்கு விருப்பப்பட்டு ராகுலுடன் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான்.

26 தேர்தலில் நிச்சயம் விஜய் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார் அதில் எந்த சந்தேகமும் கிடையாது கணிசமான வாக்குகள் அவருக்கு கிடைக்கும்.

ஆனால் அவை வெற்றியாக மாறுமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

டெல்லி கார் குண்டு வெடிப்பு என்பது யாரும் ஏற்றுக் கொள்ள முடியாதது தற்கொலை படை தாக்குதல் என்பது இந்தியாவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் பாதுகாப்பு குறைபாடு இருந்ததா என்பது குறித்தும் மத்திய படைகள் பயன்படுத்தும் துப்பாக்கி குண்டுகள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்பாகவும் எங்கிருந்து அந்த குண்டுகள்
அவர்களுக்கு கிடைத்தது என்பது குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும். இது குறித்து நாங்கள் வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்புவோம்….

பீகாரை போன்று தமிழகத்திலும் திமுக அரசு தேர்தல் நேரத்தில் பெண்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

விஜயகாந்த் உடன் உறவில் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. 26 தேர்தலை திமுக கூட்டணி தான் நாங்கள் சந்திப்போம். பீகார் தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு பின்னாடி தான் அதே வேளையில் தமிழகத்தில் அந்த முடிவால் பாதிப்பு இருக்காது.

1967 லிருந்து காங்கிரஸ் கட்சிக்குள் பிரச்சனை இதுதான்

தலைமை இடத்தில் இருப்பவர்கள் தான் அதனை சரி செய்ய வேண்டும் என்னால் அதற்கான மருந்தை கொடுக்க முடியும். ஆனால் நான் கொடுக்க மருந்தை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி எனக்கு கிடைக்காது கொடுக்கவும் மாட்டார்கள்.

என் தந்தைக்கு அந்த பதவி கிடைக்கவில்லை

மெட்ரோ திட்டம் எல்லா ஊருக்கும் தேவையில்லை தமிழகத்தில் சென்னையை தவிர மற்ற ஊர்களுக்கு மெட்ரோ தேவையில்லை என்பதுதான் எனது நிலைப்பாடு

நெட்வொர்க் பதிலாக வேறு ஏதாவது போக்குவரத்து வசதிகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.