அனைவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டின் அனுபவங்களையும் பாடங்களையும் சுமந்து கொண்டு, புதிய நம்பிக்கைகள், புதிய இலக்குகள், புதிய கனவுகளுடன் நாம் இந்த புத்தாண்டை வரவேற்கிறோம். சமூக நீதி, சமத்துவம், ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகிய மதிப்புகளை அடித்தளமாக கொண்டு, வளர்ச்சியும் மனிதநேயமும் இணைந்த இந்தியாவை உருவாக்குவது நமது கூட்டுப்பொறுப்பாகும்.

வரும் ஆண்டில் விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைத்துப் பிரிவினருக்கும் முன்னேற்றத்தின் ஆண்டாக அமைய வேண்டும். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் ஆகியவற்றில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி கிடைக்க நாம் தொடர்ந்து பாடுபடுவோம்.
இந்த புத்தாண்டு உங்கள் குடும்பங்களில் அமைதி, ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் வளம் கொண்டு வரட்டும். ஜனநாயகத்தின் வலிமையை காக்கவும், நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.




