• Wed. Mar 26th, 2025

கடல் சீற்றம் எடுத்த பகுதிகளில் விஜய் வசந்த் ஆய்வு

கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் தேர்தலில் போட்டியிட்டும் தாரகை கத்பட் இருவரும், கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா திருத்தலம் பங்கு தந்தை அருட்பணி உபால்டு அவர்களுக்கு சால்வை அணிவித்து ஆசி பெற்றனர்.

அதன்பின் வசந்த் மீனவ கிராமங்களான ஆரோக்கியபுரம், சின்ன முட்டம், மணக்குடி, மேலமணக்குடி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரி மீனவ மக்களிடம் வாக்குகள் சேகரித்தார், இந்த வாக்கு சேகரிப்பின் மேலமணக்குடி பகுதியில் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, வருங்காலத்தில் இது போன்ற பாதிப்பு ஏற்படா வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என வேட்பாளர் விஜய் வசந்த் தெரிவித்தார்.


இந்த வாக்கு சேகரிப்பின் போது விளவங்கோடு இடைத்தேர்தலில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தாரகை கத்பட், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் கே. டி. உதயம், திமுக அரசு வழக்கறிஞர் மதியழகன், திமுக ஒன்றிய செயலாளர் பாபு, குமரி காங்கிரஸ் இணை செயலாளர் தாமஸ் மற்றும் திமுக காங்கிரஸ் இந்திய கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட உள்ளுர் மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு ‘கை’சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்கள்.