• Fri. Mar 27th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

ஜெயலலிதாவின் தொகுதியில் கால் பதிக்கும் விஜய்..,

Byரீகன்

Sep 6, 2025

தவெக தலைவர் விஜய், தனது முதல் தேர்தல் பரப்புரையை வரும் 13-ம் தேதி திருச்சி ஸ்ரீரங்கத்தில் தொடங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் குறித்து புஸ்ஸி ஆனந்த், திருச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

ஏற்கனவே 2 மாநில மாநாடுகளை வெற்றிகரமாக முடித்துள்ள போதிலும், தேர்தல் பரப்புரை களத்தில், அதுவும் ஜெயலலிதா வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் (2011-ல்) தொகுதியில் முதல் முறையாக விஜய் கால் பதிக்க உள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில் திருச்சியில் ஒரு தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் தகவல்கள் கசிந்த நிலையில் விஜய் தற்போது திருச்சியில் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பது திருச்சியில் உள்ள பெரிய அரசியல் வாதிகளுக்கு பீதியை கிளப்பி உள்ளது