ஆவணி அமாவாசை முன்னிட்டு மதுரை முக்தீஸ்வரன் கோவிலில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது, அன்னதானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாட்டினை அட்சய பாத்திர நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாடு செய்திருந்தார்.
ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது
கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அடுத்த வாரம் முதல் வாரத்தில் மதுரை, தேனி ,திண்டுக்கல் ஆகிய மாவட்டத்திற்கு எழுச்சிப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.
கட்சி தொடங்கியவர்கள் மாநாடு நடத்தலாம், ஆனால் மாநாட்டில் என்ன பேச வேண்டும் என்ற வரைமுறை உள்ளது. அவர்கள் பேசும்பொழுது அவர்கள் மீது நம்பிக்கை வர வேண்டுமே தவிர வருத்தம் இருக்கக் கூடாது. மற்றவர்களை தாழ்த்தி பேசுவதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கள்ள மாட்டார்கள். இன்றைக்கு அதிமுக மக்களுக்காக சேவை செய்யும் இயக்கமாகும்.

விஜய் தற்பொழுது மாநாட்டில் திமுகவை பாய்சன் என்று கூறுகிறார், போன மாநாட்டில் பாயசம் என்று கூறினார்,அடுத்த மாநாட்டில் அமுது என்று கூட பேசுவார்.
திமுக தீய சக்தியை அப்புறப்படுத்த வேண்டும் என்றுஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தொடங்கினார், பேரறிஞர் அண்ணா அரசியல் கட்சி தொடங்கும் பொழுது தந்தை பெரியாரை அரசியல் ஆசனாக நினைத்தார். அதேபோல எம் ஜி ஆர் கட்சி தொடங்கும் பொழுது அண்ணாவை அரசியல் ஆசானாக நினைத்தார். புரட்சித்தலைவி அம்மா புரட்சித்தலைவரை அரசியல் ஆசனாக நினைத்தார். அதனைத் தொடர்ந்து எடப்பாடியார் அம்மாவை அரசியல் ஆசனாக நினைத்து அதிமுகவை வழிநடத்தி வருகிறார். ஆனால் இன்றைக்கு மாநாடு நடத்திய விஜய் தனக்கு யார் அரசியல் ஆசான் என்று சொல்லவில்லை.
இன்றைக்கு புரட்சித் தலைவரை தவிர்த்து விட்டு யாரும் கட்சியை நடத்த முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. இன்றைக்கு அதிமுக எடப்பாடியாரின் கையில் தன் உள்ளது. இதில் விஜய்க்கு சந்தேகம் வேண்டாம் .சாமானிய தொண்டனாக இருந்து படிப்படியாக உயர்ந்து இன்றைக்கு எட்டு கோடி மக்களின் நம்பிக்கை குறிய தலைவராகவும், தொண்டர்களின் வழிகாட்டியாக எடப்பாடியார் உள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடியாரை வைத்து தான் தேர்தலை சந்தித்தோம். 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தான் முதலமைச்சர் வேட்பாளர், இன்றைக்கு தேசியக் கட்சியில் உள்ள அமித்ஷாவே எடப்பாடியார் முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்துவிட்டார் இதுதான் கள நிலவரம் இதில் விஜய்க்கு எந்த சந்தேகம் வேண்டாம்.
இன்றைக்கு விஜய் வாய்க்கு வந்ததை வந்ததை பேசி வருகிறார். இதனால் அவருக்கு தான் பின்னடைவை தவிர எடப்பாடியாருக்கு எந்த பின்னடைவு ஏற்படப் போவதில்லை, எடப்பாடியார் அற்புதமான குணம் படைத்தவர் ,ஆற்றல், பண்பும் மிக்கவர் ஆனால் இன்றைக்கு விஜய் ஒன்றரை வருட குழந்தை தான்.
எடப்பாடியார் முதலமைச்சர் இருந்த போது ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகள், 64 கலை கல்லூரிகள், குடிமராமத் திட்டம், 2000 மினி கிளினிக்,2,500 பொங்கல் பரிசு என பல்வேறு சாதனைகளை எடப்பாடியார் படைத்துள்ளார் இதுகுறித்து அவருக்கு தெரியவில்லையா?
கட்சி நடத்தலாம், மாநாட்டை நடத்தலாம் ஆனால் மக்களை நாங்கள் தான காப்பாற்ற போகிறோம் என்பது போல பேசுவது யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 75 ஆண்டுகள் உள்ள திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்றால் என்றால் அதிமுகவால் தான் முடியும் என்று தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் தெரிகிறது நேற்று கட்சி தொடங்கிய விஜய்க்கு தெரியவில்லை.
இன்றைக்கு அதிமுக தொண்டர்கள் வேதனையாக உள்ளார்கள் என்று கூறுகிறார் .விஜய்க்கு எப்படி தெரியும் அப்படி என்றால் உங்களிடத்தில் எந்த தொண்டர்களும் கூறினார்களா ? அப்படி யார் சொன்னார்கள் என்று நீங்கள் சொல்லுங்கள் அதற்கு நாங்கள் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம். இன்றைக்கு அதிமுக தொண்டர்களையும், தமிழக மக்களையும் காப்பாற்ற தன் ரத்தத்தை வியர்வையாக சிந்தி எடப்பாடியார் உழைத்து வருகிறார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் 43 தொகுதிகளில், ஒரு லட்சத்து 49 வாக்குகள் பெற்றிருந்தால் மீண்டும் ஆட்சி அமைந்திருக்கும் .கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 49 லட்சம் வாக்குகளை பெற்று தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடியார் உள்ளார். அதிமுகவின் வாக்கு வங்கியை யாரும் சிதைக்க முடியாது ராணுவ கட்டுப்பாட்டுடன் அதிமுக வாக்கு வங்கி உள்ளது அதிமுக பற்றி விஜய் கவலைப்பட வேண்டாம் தனது தொண்டர்கள் பற்றி கவலைப்பட வேண்டும்
பாஜக பொருந்தாத கூட்டணி என்று கூறுகிறார் இன்றைக்கு மக்கள் ஏற்றுக்கொண்ட கூட்டணியாக அதிமுக தலைமையிலான கூட்டணி உள்ளது சரியான விதை இருந்தால் தான் மரம் பலன் தரும் ஒட்டு விதை இருந்தால் மரம் பலன் தராது இன்றைக்கு புரட்சித்தலைவர் உருவாக்கிய இந்த ஆலமரத்தை எடப்பாடியார் மாபெரும் செல்வாக்கோடு வளர்த்து வருகிறார்.
மாநாட்டிற்கு கூட்டம் வரும் மாநாட்டில் பேசுவதை மக்கள் கேட்க மாட்டார்கள் தேர்தலில் தான் அதுக்குரிய மதிப்பு அளிப்பார்கள். புரட்சித்தலைவர் படத்தை வைத்துள்ளார் கருணாநிதி படத்தை வைக்க முடியுமா?.
திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என எடப்பாடியார் கூறி வருகிறார் இன்றைக்கு பிஜேபி, சீமான், விஜய், பாமக, தேமுதிக, போன்ற கட்சிகள் எல்லாம் திமுகவை எதிர்த்து வருகிறது. இன்றைக்கு திமுகவிற்கு 65 சகவீதம் எதிர்ப்பு உள்ளது, ஆதரவு 35 சதவீதம் தான் உள்ளது திமுக குடும்ப கட்சியை ஆட்சி வரக்கூடாது இதுதான் மக்கள் எண்ணமாகும்
.
விஜய் தொண்டர்களை வீணடிக்க கூடாது, தொண்டர்கள் பேச்சைக் கேட்டால் தான் தலைவராக நிலைத்து நிற்க்க முடியும்,அப்போது தான் தொண்டர்கள் ஆதரவு அளிப்பார்கள் விஜய் தொண்டர்களின் உழைப்பை சிதைக்க வேண்டாம் தமிழகத்தில் திமுகவிற்கும், அதிமுகவிற்கும் தான் போட்டி என கூறினார்.