
மதுரை மாவட்டம் சோழவந்தானில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அடுத்த மாதம் என் மண், என் மக்கள் என்ற யாத்திரை வரவுள்ள நிலையில் சோழவந்தானில் இடம் தேர்வு செய்யும் பணியில் பாஜக மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். இதில் பாஜக மாநில துணைத்தலைவர் நரேந்திரன், பாஜக விளையாட்டு மாநில பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, பாஜக மாவட்ட தலைவர் ராஜசிம்மன், சோழவந்தான் மண்டல் தலைவர் கதிர்வேல், வாடிப்பட்டி தெற்கு மண்டல தலைவர் அழகர்சாமி மற்றும் நிர்வாகிகள் சோழவந்தான் நகரின் பல்வேறு இடங்களில் பார்வையிட்டனர்.
