• Mon. Apr 13th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

விஜய் அதிகார ஆசைக்காக அரசியலுக்கு வந்துள்ளார் -சுப.வீரபாண்டியன்..,

BySeenu

Apr 13, 2026

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆதரித்து திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுசெயலாளர் சுப.வீரபாண்டியன் பூ மார்க்கெட் தெப்பக்குளம் மைதானம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். இந்த பரப்புரை நிகழ்ச்சியில் திராவிடர் இயக்கங்களை சார்ந்தவர்கள் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். செந்தில் பாலாஜி வேறு இடத்தில் வாக்கு சேகரித்து கொண்டிருந்ததால் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை.

இதில் பேசிய சுப.வீரபாண்டியன் , செந்தில் பாலாஜி தொட்டதே வெற்றி என்றால் அவரே வேட்பாளராக நிற்கும் பொழுது அது எந்த அளவிற்கு வெற்றியை கொண்டு வரும் என்று நமக்குத் தெரியும், ஒரு நாளும் கருப்பு சிவப்பு கொடியின் கீழ் நின்று பேசுபவர்கள் தரம் தாழ்ந்து பேசுவதில்லை என்றார்.

முதலமைச்சர் ஸ்டாலின் வானதி சீனிவாசனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார், இதுதான் முதலமைச்சரின் பண்பு, நம்முடைய முதலமைச்சர் எச்.ராஜா மருத்துவமனையில் இருந்த பொழுது கூட நலம் விசாரித்தவர், எச்.ராஜா முதலமைச்சருக்கு கட்டம் சரியில்லை என்று சொன்னவர் ஆனால் பாவம் அவருக்கு கட்டம் சரியில்லால் போனது என்றார்.

அறிவாலயத்தின் அடி செங்கல் வரை உருவுவேன் என்று அண்ணாமலை கூறினார், ஆனால் அவருடைய செங்கலையே உருவி விட்டார்கள் என்று செந்தில் பாலாஜி மிகச் சரியாக சொன்னார், அண்ணாமலைக்கு கட்சியிலும் பொறுப்பில்லை வேட்பாளராகவும் நிற்கவில்லை பாவம் ஒரு ஊராகச் சென்று பேசிக்கொண்டு இருக்கிறார் என்று தெரிவித்தார்.

இந்த அரசு பெண்களுக்கான அரசு பெண்களுக்காகவே ஆயிரம் திட்டங்களை செய்துள்ளது, இந்த அரசு வழங்குவது பெண்களுக்கான இலவச தொகை அல்ல உரிமை தொகை ஆகும், திமுக கூறும் எதுவும் தேர்தலுக்காக சொல்லப்படுபவை அல்ல பெண்களுக்காக இலவசமாக வழங்கப்படுபவை அல்ல அவை அனைத்தும் பெண்களின் சுயமரியாதையை காப்பாற்றுவதற்கு அளித்துள்ளது ஆகும் என்றார். ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்க வேண்டும் ஆனால் ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கக் கூடாது, ஸ்டாலின் அரசு அடுத்த தேர்தலுக்காக அல்ல அடுத்த தலைமுறைக்காக பணிகளை செய்து வருகிறது என்றார். CAA சட்டம் சிறுபான்மை மக்களை பாதிக்கும் வகையில் மோடி அரசால் கொண்டுவரப்பட்டது என்றார்.

ஒருவர் புதிதாக புறப்பட்டு வந்துள்ளார்(விஜய்) அவர் நல்ல நடிகராக இருக்கலாம் நமக்கு எந்த சிக்கலும் இல்லை என்றார். ஆனால் 200 கோடி ரூபாய் வருமானத்தை விட்டு விட்டு மக்கள் பணி செய்வதற்கு வருகிறேன் என்கிறார், அதில் ஏதாவது உண்மை உள்ளதா?, நீ 200 கோடி ரூபாய் சம்பளத்தை விட்டு விட்டு மக்கள் பணியாற்ற வந்து உள்ளாயா? என கேள்வி எழுப்பினார். 200 கோடி ரூபாய் சம்பளத்தை விட்டு விட்டு கதாநாயகன் என்ற இடத்திலிருந்து முதலமைச்சர் என்ற இடத்திற்கு செல்வதற்கு ஆசையிலிருந்து பேராசையோடு ஒருவர் வந்திருக்கிறார், முதலமைச்சர் ஆவது தியாகமா? முதலமைச்சர் பதவி என்பது தியாகம் அல்ல என்றார்.

விஜய் எந்த ஒரு துறவையும் மேற்கொள்ளவில்லை பணம் புகழ் உள்ளது அதற்கு மேல் அதிகாரம் வேண்டும் என்ற ஆசையில் வந்துள்ளார் அவரை மீண்டும் திரைப்படத்திற்கு அனுப்புங்கள், விஜய்க்கும் அரசியலுக்கும் தொடர்பு இல்லை என்றார். மேலும்
இன்னொருவர் இருக்கிறார் அவர் மலிவு விலைக்கு சென்றவர் அவரைப் பற்றி பேச வேண்டியது இல்லை என்று சீமானை குறிப்பிட்டார்.

தற்பொழுது நடப்பது மூன்று முனை நான்கு முனை ஐந்து முனை போட்டி எல்லாம் கிடையாது சசிகலாவும் ராமதாஸும் கூட்டணியாக கட்சியை துவக்கி உள்ளார்கள் பாவம் ராமதாஸிற்கு நடக்கக்கூட முடியவில்லை, அப்பா மகன் சண்டைக்கு எல்லாம் கட்சியை உருவாக்க முடியாது, தற்பொழுது தமிழகத்தில் நடப்பது இருமுறை போட்டி தான் அது தமிழகத்திற்கும் டெல்லிக்கும் நடக்கும் போட்டி என்றும் தமிழ்நாட்டை தமிழ்நாடு ஆள வேண்டுமா அல்லது டெல்லி ஆள வேண்டுமா என்று முடிவு செய்யுங்கள்
தமிழ்நாட்டை நாம்தான் ஆள வேண்டும் என்றால் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் அடிமைகளாக இருப்பவர்கள் ஆள வேண்டும் என்றால் அவர்களுக்கு வாக்களியுங்கள் என்றார்.

அடிமைகளால் வாழவே முடியாது பிறகு எப்படி நாட்டை ஆள முடியும்?
அதிமுக என்பதற்கு ஒரு கட்டத்தில் அண்ணா திமுக என்ற பொருளிலிருந்து பின்னர் அடிமைகளின் திமுக என்று மாறி தற்பொழுது அமித்ஷா திமுக என்று மாறிவிட்டது, பாஜகவிற்கு ஒரு நாளும் இந்த மண்ணில் இடமில்லை, தமிழ்நாட்டில் தாமரை மலராது, இரட்டை இலை என்பது கூட தாமரையின் இலைகளாக மாறிவிட்டது என்றார்.

நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை நம்முடைய அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம் 2021 ஆம் ஆண்டு ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்கும் போது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று கூறிவிட்டு தலை நிமிர்ந்து பார்த்தார் அது ஒரு சிங்கம் தலை நிமிர்ந்து பார்ப்பது போல் இருந்தது அப்பொழுது நிமிர்ந்தது அவர் தலை அல்ல அன்று நிமிர்ந்தது நம்முடைய தமிழ்நாடு என்றார். இனி ஒரு நாளும் தமிழ்நாடு தலைகுனியாது தலைகுனியவும் விடமாட்டோம் என்று தெரிவித்தார்.