• Tue. Sep 23rd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

மக்களுக்கு நல்லது செய்ய வந்துள்ள விஜய்..,

ByPrabhu Sekar

Aug 26, 2025

திருச்சியில் இருக்கக்கூடிய சமயபுரம் மாரியம்மனை நான் மட்டுமின்றி உலகம் முழுவதும் வந்து அம்மனை தரிசித்து கொண்டாடுவோம்.

முதன்முறையாக அமெரிக்காவின் டெக்சஸ் என்ற மாகாணத்தில் டாலஸ் என்ற இடத்தில் நம்முடைய திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலை அப்படியே உருவாக்கி உள்ளனர்.

நாம் எப்படி ஆடி மாதத்தில் கூழ் ஊற்றி அம்மனுக்கு எப்படி எல்லாம் படையழிட்டு தீமிதி எல்லாம் நடத்துவோமோ தீ மிதி திருவிழாவை அடுத்த ஆண்டு நடைபெறும்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் அனுமதி பெற்று அம்மனுடைய கோவில் கட்டுவது என்பது ஒரு மிகப்பெரிய இப்போ விஷயம்.

நமது மாநிலத்தில் சமயபுரம் மாரியம்மன் எப்படி எல்லாம் காட்சியளிக்கிறாரோ அதேபோல் அங்கு வடிவமைத்து கோவிலை சிறப்பாக கட்டியுள்ளனர்.

நிறைய கோயில்களுக்கு நான் பாடல்கள் பாடி உள்ளேன் திண்டுக்கல்லில் இருக்கின்ற பாதாள செம்பு முருகனுக்கு முதல்முறையாக முதல் முறையாக பாடலை பாடியுள்ளேன்.

மதுரையில் விஜய் நடத்திய இரண்டாவது மாநில மாநாடு குறித்து கேட்டதற்கு,

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அவர் ஒவ்வொரு விஷயமும் செய்து
கொண்டிருக்கிறார்.

அதேபோல் தான் இந்த இரண்டாவது மாநாடும் நடத்தியுள்ளார். இரண்டாவது மாநாட்டிலும் மக்களுடைய நலனுக்காகவும் அவர் செய்கிறார் என நம்புகிறேன்.

நாம் சம்பாதிக்கும் கால கட்டத்திலேயே அவ்வளவு பெரிய ரசிகர்கள் இருக்கும் சூழலிலேயே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் வந்துள்ளார்.

மக்களுக்காக பல திட்டங்களையும் உருவாக்கி பேசிக் கொண்டு வருகிறார். அது கருத்தியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும், மக்களும் ரசிகர்களும் அவர் வரவேண்டும். அதேபோல அவருடைய திட்டங்களும் நல்லதாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் நானும் அதை நான் எதிர்பார்க்கிறேன்.

சினிமாவில் மார்க்கெட் போய் நான் வரவில்லை மார்க்கெட் உச்சியில் இருக்கும்போது படைபலத்துடன் வந்தேன் என கூறியது குறித்து கேட்டதற்கு,

அது அவருடைய கருத்து அவருடைய மனதிற்கு என்ன படுகிறதோ அதை கூறியுள்ளார் நான் அனைத்து கட்சி பாடகர் எந்த கட்சி அழைத்தாலும் பாடுகிறோம் மக்களுக்கு யார் நல்லது செய்கிறோம் என்று கூறி இந்த அரியணையில் அமர்கிறார்களோ அவர்கள் சிறப்பாக செய்யட்டும் என்பது தான் மக்களுடைய ஆசை முரண்பாடு கருத்துக்கள் அரசியலில் அவர்களுடன் இருக்கும் அவர்களை அழைத்தால் நாம் பாடுகிறோமா என அதோட என் வேலை முடிந்து விட்டது என கூறிவிட்டுச் சென்றார்.