• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தேவகோட்டையில் கையூட்டு வாங்கிய வீடியோ: கிராம உதவியாளர் பணியிடை நீக்கம் !

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே தாளனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். தற்போது சென்னையில் வசிக்கிறார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இவரது தந்தை இறந்துவிட்ட நிலையில் தந்தை பெயரில் தாளநேந்தல்,மஞ்சனி கிராமங்களிலுள்ள சொத்துக்களை வாரிசு அடிப்படையில் தனது பெயருக்கு மாற்ற முடிவெடுத்தார் .

இதனையடித்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் செந்தில்குமார் மனு கொடுத்த போது மறு விசாரணைக்காக மாவிடுதி கோட்டை கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்பட்டது. பட்டா மாறுதல் செய்ய கிராம உதவியாளர் ஜெயகோபி கையூட்டு கேட்டதாக கூறப்படுகிறது.

எனவே ,செந்தில்குமார் கிராம உதவியாளரிடம் 500 ரூபாய் கையூட்டு கொடுக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.தகவலறிந்த கோட்டாட்சியர் பிரபாகரன், விசாரணை நடத்தியதிய போது கையூட்டு பெற்றது உண்மை என தெரியவந்ததால் கிராம உதவியாளர் ஜெயகோபியை தற்காலிக பணி நீக்கம் செய்தனர்