மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் தமிழக வெற்றி கழக மாநாட்டிற்காக வாகனம் நிறுத்துமிடங்கள் மற்றும் நுழைவாயில் வழிகளை 6 (ஆறு வண்ணங்களில்) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாறும் வாகனங்களை நிறுத்த காணொளி மூலம் வெளியீடு செய்துள்ளனர்.

இதன் மூலம் மாநாட்டுக்கு வெளியூர்களிலிருந்து வரும் வாகனங்கள் 1 முதல் 6 வரை குறிப்பிட்ட வாகனங்களை நிறுத்துமிடங்கள் அறிவுருத்தப்பட்டுள்ளது.
1, திண்டுக்கல் ,தேனி உசிலம்பட்டி வழியாக வரும் வாகனங்கள் பார்க்கிங் எண் 1 ஒன்றில் கருநீல வண்ண வாகனநிறுத்திமிடத்திலும்
2,திருச்சி மேலூர் யானைமலை ஒத்தக்கடை நான்கு வழிச்சாலை வழியாக மண்டைல நகர ஜங்ஷன் வழியாக வந்து பச்சை நிற பார்க்கிங்கில் இரண்டாவது எண்ணில் நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
3,புதுக்கோட்டை, திருப்பத்தூர் நான்கு வழிச்சாலை சிவகங்கை நான்கு வழிச்சாலை மானாமதுரை நான்கு வழிச்சாலை திருபுவனம் முக்குளம் ஜங்ஷன் வழியாக மீனாட்சிபுரம் வழியாக மாநாட்டை திடலை அடைந்து பார்கிங் எண் 3ல் நிறுத்தவும்

4,ராமநாதபுரம் பார்த்திபனூர் நான்கு வழிச்சாலை திருச்சியில் ஜங்ஷன் மற்றும் அருப்புக்கோட்டை நான்கு வழிச்சாலை காரியாபட்டி வழியாக பார்க்கிங்கன் நான்கில் நிறுத்தவும்
5,திருநெல்வேலி கோவில்பட்டி தூத்துக்குடி எட்டையாபுரம் பந்தல்குடி இல் இருந்து வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை சந்திப்பு மற்றும் காரியாபட்டி வழியாக வந்து வாகன நிறுத்தம் 5 ல் இளநீல வண்ண வாகன நிறுத்ததில் நிறுத்தவும்
6.தென்காசி அழகாபுரி நான்கு வழி சாலை சந்திப்பு எரிச்சநத்தம் விருதுநகர் வழியாக அருப்புக்கோட்டை நான்கு வழிச்சாலை வழியாக காரியாபட்டி வழியாக வாகன நிறுத்தம் 6ல் இளஞ்சிவப்பு நிற வண்ண வாகன நிறுத்துமிடத்திற்கு வந்து மாநாடு திடலை அடையவும்
மதுரை மாவட்ட காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை இணைந்து மேற்கொண்ட வாகன நிறுத்துமடங்களை அந்தந்த ஊர்களில் இருந்து வரும் வாகனங்கள் நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.