திண்டுக்கல் மாவட்டம் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உட்பட்ட அருள்மிகு பழனியாண்டவர் கலை கல்லூரியில் சுயநிதி பிரிவு வணிகவியல் துறை பேராசியர் கௌதம் என்பவர் தொடர்ந்து 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

மாணவர்களை அமரும் நாற்காலியைக் கொண்டு மாணவர்களை தாக்கும் வீடியோ காட்சிகளும் , மாணவர்களை வகுப்பறை விட்டு வெளியே ஓடும் காட்சிகளும் ,இருசக்கர வாகனத்தில் வகுப்பறைக்குள் வாகனத்தை செலுத்தி மாணவர்களை அச்சுறுத்தியும் ,தொடர்ந்து ஆபாச பேச்சுக்களை பேசி வரும் பேராசிரியர் கௌதம் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இது குறித்த மாணவர்களை தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களை பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.