• Sat. Jun 3rd, 2023

பாம்புகள் நடனமாடும் வீடியோ காட்சிகள்

ByKalamegam Viswanathan

Apr 23, 2023

யாராக இருந்தாலும் பாம்பு என்றால் பயம் இருக்கத்தான் செய்யும், ஆனால் இங்கு இரண்டு பாம்புகள் நடனமாடும் வீடியோ காட்சிகள் நெட்டிசன்களை அதிசயத்தில் ஆழ்த்தியுள்ளன.
தற்போது வெளிவந்துள்ள இந்த பாம்புகளின் வீடியோ, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மூணாண்டிபட்டி கிராமத்தில் பொட்டல் காடு பகுதியில் எடுக்கப்பட்டது. பொட்டல் காடு பகுதிக்கு அருகே உள்ள வீட்டில் வளர்த்து வந்த ஆளன் என்ற நாய் இடைவிடாமல் குறைத்துக் கொண்டிருந்தது. அப்போது மக்கள் அனைவரும் நாய் குரைப்பதை சந்தேகப்பட்டு அக்கம் பக்கத்தில் பார்த்த போது முட்புதர் அருகே இரண்டு கண்ணாடி விரியன் பாம்புகள் நடனமாடிக் கொண்டிருந்தது. சுமார் பத்து அடி நீளமுள்ள இரு கண்ணாடி விரியன் பாம்புகள் மிக நெருக்கமாக பின்னிப்பினைந்து நடனமாடியதை அப்பகுதி மக்கள் வேடிக்கை பார்த்து ரசித்தனர்.


இதுகுறித்து பாம்பு பிடி வீரர் சினேக் சகா கூறியதாவது:
கொடிய விஷம் உடைய இந்த கண்ணாடி விரியன் பாம்பு கொஞ்சி குலாவி, நடனம் ஆடும் காட்சி மிகவும் அரிய காட்சி. இரண்டு பாம்பும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து தரையில் இருந்து எழுந்த நடனம் ஆடினால் அது ஆண் பாம்புகள் என்றும், இரண்டு பாம்புகளும் பின்னிப்பிணைந்து தரையோடு தரையாக படுத்து நடமாடினாள் அது பெண் பாம்புகள் என்றும், இரு ஆண் பாம்புகள் ஆடுவது பெண் பாம்பை தன் வசப்படுத்துவதற்காக இரு ஆண் பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து நடனம் ஆடும் இதில் எந்த ஆண் பாம்பு வெற்றி பெறுகிறோதோ அந்த ஆண் பாம்பு பெண் பாம்பிடம் இன சேர்க்கை கொள்ளும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *