• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சீட்டு பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வரும் ஊர் தலைவரை கண்டித்து பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வட்டவிளையில் ஊர் மக்கள் மாதம் மாதம் கட்டிய சீட்டு பணம் சுமார் 80 லட்சம் ரூபாயை பணம் கட்டியவர்களுக்கு திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வருவதாக கூறி ஊர் தலைவரை கண்டித்து ஊர் கோவில் முன்பு பாதிக்கப்பட்ட மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள வட்டவிளை ஊரில் கூலி தொழிலாளர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் குழந்தைகளின் படிப்பு, திருமணம், மருத்துவ வசதிகள், வீடு கட்டுவது போன்ற பல்வேறு திட்டங்களை மனதில் வைத்து ஊர் தலைவர் சிவ கிருஷ்ணன் ஊர் வளர்ச்சிக்காக நடத்தப்பட்ட மாதாந்திர சீட்டில் ஏராளமானோர் சேர்ந்துள்ளனர்.

8 மாதம் 9 மாதம் வரை சீட்டு பணம் கட்டி வந்துள்ளனர். ஒவ்வொருவரும் 3 லட்சம், 5 லட்சம் என்ற 20 மாதக்கணக்கில் சீட்டுகளை போட்டு மாத தொகையைக் கட்டி வந்துள்ளனர். இதில் ஒரு சிலர் ஏழாவது எட்டாவது சீட்டை பிடித்துள்ளனர். சீட்டை பிடித்தவர்களுக்கு மூன்று மாதம் 4 மாதம் ஆனப் பின்பு அதற்குரிய பணத்தை ஊர் தலைவர் சிவ கிருஷ்ணன் கொடுக்கவில்லை என கூறபடுகிறது. இதனால் சந்தேகமடைந்த ஊர் மக்கள் ஊர்த் தலைவர்கள் அணுகி சீட்டு பிடித்து நான்கு மாதம் ஆகியும் இதுவரை எனக்கு சீட்டு பணம் தரவில்லை என்று கேட்டதற்கு, உங்கள் பணத்தை ஊர் கோயிலுக்கு செலவு பண்ணி விட்டேன் என கூறியதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் மோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு ஊர் கோயிலில் முன்பாக ஊர் தலைவர் மீது சிவகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெண்கள் உட்பட ஊர் மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து இருதரப்பும் விசாரணை செய்து வருகின்றனர். இதுவரை சுமார் ஊர் சீட்டு பணம் என்ற பெயரில் 80 லட்ச ரூபாய் மக்களுக்கு அவர் கட்டிய பணத்தை வழங்க வேண்டியுள்ளதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.