கோவை மணியக்காரன் பாளையத்தைச் சேர்ந்த சிவராம் என்பவரின் மகள் ரிதன்யா சிவராம், தி இந்தியன் பப்ளிக் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் ஆரோக்கிய வாழ்வை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சியாக (“வைப்ரன்ஸ் ஹப்”www.vibrancehub.org’) என்ற இணைய தளம் மற்றும் மொபைல் ஆப்பை உருவாக்கியுள்ளார்.

இந்த தளம் மாணவர்கள் திட்ட அடிப்படையிலான கற்றல் மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை அனுபவ ரீதியாக கற்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இது குறித்து ரிதன்யா கூறுகையில், செயற்கை நுண்ணறிவு காலத்தில் தகவல்கள் அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை சிந்தித்து படைப்பாற்றலாக மாற்றும் வழிகாட்டி தேவைப்படுகிறது அதற்காகவே இந்த வைப்ரன்ஸ் ஹப் உருவாக்கப்பட்டது என்றார்.
இது அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் முழுக்க கிண்டர்கார்டன் பிரேம் ஒர்க் என்ற “ஆர்வம், திட்டங்கள், தோழமை, விளையாட்டு” என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது என்றார்.
இது கல்வியை புத்தக அறிவை மட்டும் வழங்கும் முறை அல்லாது, சிந்தனை திறன், தன்னம்பிக்கை, மற்றும் குழு ஒத்துழைப்பு ஆகியவற்றை வளர்க்கும் கருவியாக வலியுறுத்துகிறது என்றார்.

தேசிய கல்வி கொள்கை 2020 ஒரு புதிய இந்தியாவை உருவாக்க திட்டமிட்டுள்ளது. அந்த திட்டத்திற்கான தொழில்நுட்ப அடித்தளத்தை அமைக்கிறது எனவும் மாணவர்கள் நீண்டகாலம் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், படைப்பாற்றலுடன் செயல்பட வைக்கும் சமூகத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம் என்றும் என்றார்.













; ?>)
; ?>)
; ?>)