• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கிய வேப்பந்தட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்

ByT.Vasanthkumar

Aug 1, 2024

பெண் காவலர்கள் குறித்து அவதூறு பரப்பியதாக யுடியூபர் சவுக்கு சங்கர் மீது பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள காவல்துறையினர் புகார் அளித்து நீதிமன்ற காவலில் எடுத்துள்ள நிலையில் பெரம்பலூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தமிழ் செல்வி சைபர் கிரைமில் அளித்த புகாரின் பெயரில் சவுக்கு சங்கரை இன்று பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் நீதிபதி பருவதராஜ் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் பெண் காவலர்கள் குறித்து அவதூறு பரப்பியது உட்பட்ட 17 வழக்குகள் சவுக்கு சங்கர் பெயரில் உள்ள நிலையில் தற்போது இந்த வழக்கில் நீதிபதி ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். தொடர்ந்து பெரம்பலூர் போலீஸார் அவரை சென்னை புழல் சிறைக்கு அழைத்து சென்றனர்.