2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அமைப்பு மறுசீரமைப்பு இயக்கத்தின் கீழ் தமிழகத்தில் புதிய காங்கிரஸ் மாவட்ட தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தெலுங்கானா அரசின் ஆலோசகரும் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பார்வையாளருமான ஹர்கரா வேணுகோபால் ராவ் இன்று திண்டுக்கல்லில் காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகளிடையே நேர்காணல் நடத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர்:

காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையிலும், கட்சிக்கு புதிய ரத்தம் பாய்ச்சி வகையிலும் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைவர்களுக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக விண்ணப்பித்தவர்களுடன் நேருக்கு நேர் ஆலோசனையும் நேர்காணலும் நடைபெற்று வருகிறது. அனைத்து நியமனங்களும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் அமையும் இதற்காகத்தான் காங்கிரஸ் மேலிடம் தேர்தல் பார்வையாளர்களை நியமனம் செய்துள்ளது. கட்சிக்கு இளம் ரத்தம் பாய்ச்சும் வகையில் மாவட்ட தலைவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். மேலும் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மக்கள் என அனைவருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்றார்.

தொடர்ந்து பீகாரில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்ட போதும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததாக சொல்கிறார்கள். உண்மையில் ராகுல் காந்தியின் தேர்தல் வியூகங்கள் பலனளித்தது. ஆனால், எங்களிடம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இல்லை ஒரு செல்போனை கண்ட்ரோல் செய்வது போல வாக்கு இயந்திரங்களை அவர்கள் நிதிஷ்குமார் பாஜக கண்ட்ரோல் செய்து விட்டார்கள். அதனால் தான் பின்னடைவை சந்தித்தது என்பது அனைவருக்குமே தெரியும் போது வாக்கு திருட்டு நடைபெற்றதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், அதையெல்லாம் தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை.
2026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி உடையும் என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை தான் விஜய் உடன் கூட்டணி வைக்க கேரள காங்கிரஸ் தரப்பில் கே.சி. வேணுகோபால் முயல்வதாக சொல்கிறார்கள் உண்மையில் அப்படியெல்லாம் கிடையாது. தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் திமுக கூட்டணி வலுவாகவே உள்ளது. எங்கள் உயர்தலைவர்கள் திமுக தலைமையுடன் நெருங்கிய தொடர்பு நட்புணர்வுடனும் இருக்கிறார்கள். அதே நேரத்தில் கூட்டணி குறித்த அனைத்து முடிவுகளையும் எங்களின் உயர்மட்ட தலைவர்கள் தான் எடுப்பார்கள். அது குறித்து கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை.

தமிழகத்தில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கூட்டணி இருக்கும் நிலையில் கேரளாவில் எதிர்க்கட்சிகளாக இருப்பதால் எந்த பின்னடைவும் கிடையாது இது பாஜகவின் வளர்ச்சிக்கும் உதவாது. உண்மையை சொல்லப்போனால் தமிழகத்திலேயே நாங்கள் பல ஆண்டுகள் ஆட்சியில் இல்லை. ஆனால், எங்கள் மக்கள் பிரதிநிதிகள் இருக்கிறார்கள், மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் சென்றடைவதற்கும் சமூகநீதி மதச்சார்பின்மை தொடர்வதற்கும் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தெலுங்கானா, கர்நாடகா, கேரளா என பல மாநிலங்களிலும் அப்படித்தான் எதிர்க்கட்சிகளாக இருக்கிறோமா அல்லது எதிர் அணியில் இருக்கிறோமா என்பதெல்லாம் முக்கியமில்லை, அரசை வழிநடத்திச் செல்ல ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். மாநிலங்களுக்கு மாநிலங்கள் வேறு வேறு கூட்டணி என்பதெல்லாம் கிடையாது.
தேசிய அளவில் இந்தியா கூட்டணி வலுவாகவே இருக்கிறது. அதேபோல மத்தை வைத்து ஆட்சியைப் பிடிக்கலாம் என பாஜக கருதுகிறது, நானும் இந்து தான் நான் ருத்ராட்சமும் அணிந்திருக்கிறேன். ஆனால் மதத்தை வைத்து ஒருபோதும் அரசியல் செய்தது கிடையாது. மதத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டிய நிலை காங்கிரசுக்கு இல்லை என்றார்.








