• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கும் வெங்கட்பிரபு

சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான், டான் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது இவற்றில் டான் முதலிலும் அடுத்து அயலானும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படங்களை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்

இவற்றில் தெலுங்கு இயக்குநர் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்தப்படத்தை முடித்துவிட்டு கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன்
இந்நிலையில், இன்னொரு படத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறாராம் சிவகார்த்திகேயன். இதற்காக இயக்குநர் மற்றும் கதாநாயகன் ஆகிய இருவருக்கும் முன் தொகை கொடுத்து ஒப்பந்தம் செய்திருக்கிறதாம் ஏஜிஎஸ் நிறுவனம்.நாயகி மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் முடிவான பின்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.