• Thu. May 2nd, 2024

புது சிக்கலில் வெங்கட்பிரபு!

மாநாடு திரைப்படத்தின் வெற்றியை அடுத்து வெங்கட் பிரபு இயக்க உள்ள திரைப்படத்திற்கு மன்மத லீலை என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கிறார். வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மணிவண்ணன் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இப்படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். பிரேம்ஜி இசையமைத்துள்ள இப்படத்துக்கு தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், சென்னை திருவான்மியூர் சேர்ந்த கவிதா என்பவர் சென்னை 19வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அசோக் செல்வன் நடிப்பில் இன்று வெளியாகவுள்ள மன்மதலீலை என்ற திரைப்படத்தின் தலைப்பு தங்களுடையது என்றும், தனது தந்தை பி.ஆர். கோவிந்தராஜன் மற்றும் தாயார் விஜயலட்சுமி ஆகியோர் இணைந்து கலா கேந்திரா மூவிஸ் என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர் என்றும். அதன் மூலமாக 1976 ஆம் ஆண்டு நடிகர் கமல் நடிப்பில் மன்மதலீலை என்ற படத்தை தயாரித்தனர் என குறிப்பிடுள்ளார். தங்களுடைய அனுமதி இல்லாமல் தற்பொழுது அதே தலைப்பை பயன்படுத்தி படத்தை வெளியிட உள்ளதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது இயக்குனர் வெங்கட்பிரபு மற்றும் தயாரிப்பு நிறுவனமான ராக்போர்ட் எண்டர்டெய்ன்மெண்ட் தரப்பில், இந்த வழக்கு கடைசி நேரத்தில் பணம் பறிக்கும் நோக்கில் தொடரப்பட்டு இருப்பதால் தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதி, படத்தை வெளியீட தடைவிதிக்க மறுத்ததுடன், வழக்கு குறித்து தயாரிப்பாளரும், இயக்குனரும் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 4ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். இன்று காலை வெளியாக வேண்டிய திரைப்படம் பிற்பகலுக்கு மேல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *