பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது சிம்புவை பற்றி அவதூறாக பேசியதாக யாராவது நினைத்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என அபிராமி கூறியுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து அவர் கேமராவில் இதுகுறித்து கூறிய போது சிம்பு குறித்து அவதூறாக பேசியதாக ஒரு சிலர் செய்தி பரப்பி வருகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை. நான் சிம்புவின் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அவரைப் பற்றி அவதூறாகப் பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. சொல்ல போனால் சிம்பு எனக்கு பல விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஒருவேளை நான் சிம்புவை அவதூறாக பேசியதாக யாராவது கருதினால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.