மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை புதூரில் அமைந்துள்ளபூவன் ஓடையில் மடை அமைக்க வேண்டுமென இந்த பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

கோரிக்கை குறித்து சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ சட்டமன்றத்தில் பேசி அரசின் அனுமதியை பெற்று வந்த நிலையில் இதற்கான பூமி பூஜை தென்கரை புதூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்கலந்து கொண்ட வெங்கடேசன் எம் எல் ஏ பணிகளை தொடங்கி வைத்தார். இந்த மடையானது சுமார் 1.5 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது தென்கரை புதூர் ஊத்துக்குளி மேல மட்டையான் பொட்டுல்பட்டி கீழ மட்டையான் கச்சிராயிருப்பு மேலக் கால் உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பாசன நிலங்களுக்கு பாசன வசதி பெறக்கூடிய வகையில் நடைபெறும் பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் விவசாய அணி வக்கீல் முருகன் மாவட்ட பிரதிநிதி ஊத்துக்குளி ராஜாராம் தென்கரை சோழன் ராஜாசின்னமணி அவைத்தலைவர் மேலக்கால் சுப்பிரமணி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா ஐயப்பன் ஊராட்சி செயலாளர் முனியராஜ் ஊத்துக்குளி ராமலிங்கம் கச்சிராயிருப்பு பாண்டி
மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த பாசன வசதி ஏற்படுத்த கோரி விவசாயிகள் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.






