மதுரை திருப்பரங்குன்றம் விவகாரத்தில், எம்.பி நவாஸ்கனி புகைப்படத்தை காலணியால் தாக்கிய பாஜக சிறுபான்மை பிரிவை சேர்ந்த வேலூர் இப்ராஹீம் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் மலை மீது இஸ்லாம் சமுதாயத்தினர் கந்தூரி விருந்து நடத்த எதிர்ப்பு கிளம்பிய சர்ச்சையை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி மலை மீது அசைவ உணவு சாப்பிட்டதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்த நிலையில், பாஜக சிறுபான்மை நல பிரிவை சேர்ந்த வேலூர் இப்ராஹிம் நவாஸ் கனியின் புகைப்படத்தை காலணியால் அடித்து தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலைக்கு செல்வதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் இப்ராஹீமை மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








