சிவகாசி காமராஜர் சாலையில் உள்ள புல்வெளியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பலத்த காற்று வீசியதால் புல்வெளியில் ஏற்பட்ட தீ கருப்பசாமி என்பவருக்குச் சொந்தமான பழைய இரும்பு கடையில் பிடித்து எரிந்தது.

இதில் வெளியே குவித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களின் மீது மளமளவென பற்றி எரிந்தது. தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு வாகனம் மற்றும் தனியார் வாகனங்கள் மூலமாக தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் கடை முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் டிராக்டர், ஆம்னிகார் மற்றும் சரக்கு ஆட்டோ ஆகிய 3- வாகனங்களோடு, பழைய பிளாஸ்டிக் மற்றும் கழிவு பொருட்களும் முற்றிலும் எரிந்து நாசமாயின.
இதன் மொத்த சேத மதிப்பு ரூபாய் 10- லட்சத்திற்கும் மேல் இருக்குமென கூறப்படுகிறது. தீ விபத்து சம்பவம் குறித்து சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.