மதுரை விமான நிலைய இயக்குனருக்கு வந்த மின்னஞ்சலில் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வந்தது.

இதனையடுத்துமதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் அதிகரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மதுரை விமான நிலைய உள் வளாகம் மற்றும் வெளி வளாக பகுதிகளில் மதுரை விமான நிலைய மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்

விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மூலம் தீவிர சோதனை செய்யப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டது
மேலும் வாகன நிறுத்தும் இடங்கள் பயணிகள் வரும் இடங்கள் பொதுமக்கள் கூடும் இடங்களில் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மூலம் தீவிர சோதனை செய்யப்பட்டது.
விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர் பயணிகளை வரவேற்க வரும் பொதுமக்களை கடந்த இரு தினங்களாக பாதுகாப்பு காரணங்களுக்காக உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

கடந்த 28ஆம் தேதி இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் வெடிகுண்டு வைத்துள்ளதாக வந்த தகவலை எடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்திற்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து மதுரை விமான நிலையம் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.