• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் தொகுதியில் வாகன சோதனை ரூ.1.24 லட்சம் பறிமுதல்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் சோழவந்தான் தொகுதி தேர்தல் பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அமைக் கப்பட்டு தொகுதி முழுவதும் பண பட்டுவாடாவை தடுக்கும் விதமாக கண்காணிப்பு மற்றும் சோதனைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தலம் முன்பாக பறக்கும் படை அதிகாரி நாகராஜா தலைமையில் சப்இன்ஸ் பெக்டர் பாபு காந்தி, ஏட்டு காயத்ரி ஆகியோர் வாகன சோதனை செய்தனர். அப்போது உசிலம்பட்டி யைச் சேர்ந்த சொக்கர் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்த போது அதில் எந்தவித ஆவணமும் இல்லாமல் வைத்திருந்த ரூ.68,600 பறிமுதல் செய்தனர். அதேபோல்தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஆண்டவர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் ஏட்டுநாக லட்சுமி ஆகியோர் வாகன சோதனை செய்தனர்.

அப்போது சரந்தாங்கி பிரிவில் திருப்பலை யைச் சேர்ந்த அப்துல் ரசாக் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்த போது அதில் எந்தவித ஆவணமும் இல்லாமல் வைத்திருந்த ரூ.55,420 பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.அதன்பின் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அதிகாரி சண்முக வடிவேல், உதவி தேர்தல் அதிகாரி தாசில்தார் ராமச்சந்திரன்,மற்றும் மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார், தேர்தல் துணை தாசில்தார் கருப்பையா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்த பின் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.