கோவையில் ஓட்டுநர் பயிற்சி கூட்டமைப்பு சார்பில் சீட்பெல்ட் அணிவது குறித்து வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு கோவையில் ஓட்டுநர் பயிற்சி கூட்டமைப்பு சார்பில் சீட் பெல்ட் அணிவது தொடர்பாக வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கோவையில் மாவட்ட நிர்வாகம், மாநகர காவல் துறை, போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து தொடர்ச்சியாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இன்று கோவை மாவட்ட ஓட்டுநர் பயிற்சி கூட்டமைப்பு சார்பில் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் போது சீட் பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

வஉசி மைதானத்தில் துவங்கிய இந்த பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன் குமார், கோவை மாநகர காவல் ஆணையாளர் கண்ணன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். இந்த பேரணியானது மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, காந்திபுரம், செம்மொழிப் பூங்கா வழியாக மீண்டும் வஉசி மைதானத்தில் நிறைவுற்றது.
இதில் கோவை ஓட்டுநர் பயிற்சி கூட்டமைப்பை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.





