• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ஐரோப்பாவில் இருந்து ஏவப்பட்ட வேகா-சி ராக்கெட் தோல்வி

ஐரோப்பாவில் இருந்து ஏவப்பட்ட வேகா-சி ராக்கெட் தோல்வியடைந்ததாக ஏரியன் ஸ்பேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
பிரான்சின் கயானாவில் இருந்து நேற்று இரண்டு செயற்கைக்கோள்களுடன் ஏவப்பட்ட வேகா-சி ராக்கெட் தோல்வியடைந்ததாக ஏரியன் ஸ்பேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பிளையட் 5 மற்றும் 6 என்ற இரண்டு புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை சுமந்து சென்ற ராக்கெட் ஏவுதல் தோல்வியடைந்துள்ளது. எஞ்சினில் ஏற்பட்ட குறைந்த அழுத்தமே தோல்விக்கு காரணம் என்று ஏரியன் ஸ்பேஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் இஸ்ரேல் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் கவுரவிலிருந்து ஏவப்பட்ட ஐந்தாவது மற்றும் கடைசி ராக்கெட் இதுவாகும்.