தேனி மாவட்டம், வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக பசுமை தினத்தை முன்னிட்டு கல்லூரியில் வளாகத்தில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா வனத்துறை சார்பில் நடவு செய்யப்பட்டது.
தேனி மாவட்ட துணை வனத்துறை அலுவலர் சிசில் கில்பர்ட் தலைமையில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
இந்த மரக்கன்றுகள் நடும் விழாவில் வீரபாண்டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் உமாதேவி, கல்லூரி பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள், ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடவு செய்தனர்.
