மதுரை மாவட்டம் சட்டமேதை அம்பேத்கரை பற்றி அவதூறாக பேசிய, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக மாவட்ட செயலாளர் சிந்தனை வளவன் தலைமையில் நிர்வாகிகள் சோழவந்தான் ரயில் நிலையத்தில் மறியல் செய்தனர். இதில் சுமார் ஐந்து நிமிடம் கால தாமதமாக நாகர்கோவில் டு கோயம்புத்தூர் ரயில் புறப்பட்டு சென்றது. ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரிட்டோ தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சமயநல்லூர் டி.எஸ்.பி. ஆனந்தராஜ் சோழவந்தான் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் தலைமையிலும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர். மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கு மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்களை சோழவந்தான் போலீசார் கைது செய்தனர். மதுரை ரயில்வே பாதுகாப்பு படை சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன். நரேந்திர பூபதி ஆகியோரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வருவாய்த்துறை மண்டல துணை தாசில்தார் புவனேஸ்வரி. சோழவந்தான் வருவாய் ஆய்வாளர் கவுதமன். சோழவந்தான் கிராம நிர்வாக அலுவலர் மரியம், அமலா உள்பட கிராம உதவியாளர்கள் இதில் இருந்தனர். மறியலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் வாடிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் ராதா, வாடிப்பட்டி பேரூர் செயலாளர் அரசு விஜயா, உசிலம்பட்டி ஒன்றியம் பழனிச்சாமி, சேடப்பட்டி மணி செல்வம், செல்லம்பட்டி மூக்கையா அலங்காநல்லூர் ஒன்றியம் தமிழழகன், மதுரை மேற்கு ஒன்றியம் தமிழாளன்
உள்பட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.
