• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

வாரிசு படம்… முதல் சிங்கிள் பாடல் இந்த நன்நாளில் வெளியீடு…

Byகாயத்ரி

Sep 9, 2022

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் படப்பிடிப்பு தொடங்கியது முதலே அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. இதைத் தடுப்பதற்காக இப்போது இயக்குனர் வம்சி படப்பிடிப்புத் தளத்துக்குள் யாருமே செல்போன் எடுத்து வரக்கூடாது என ஸ்ட்ரிட்க்காக தடை உத்தரவு பிறப்பித்துள்ளாராம். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தீபாவளிக்கு இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.