• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வன்னியர்களுக்கு உறுதியாகுமா 10.5% ஒதுக்கீடு.. இன்று முக்கிய முடிவு!

Ramadoss

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்குகளில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது குறித்து இன்று முடிவு வெளியாகயுள்ளது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இதை எதிர்த்து 25க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் சுந்தரேஷ் கண்ணம்மாள் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 10.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், அதனடிப்படையில் நடைபெறும் நியமனங்களை தடுக்கும் வகையில் சட்டத்திற்கு தடை விதிக்குமாறும் மனுதாரர்கள் தரப்பில் விவாதிக்கப்பட்டது.

இதற்கு அரசு தரப்பில், அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் ,இடஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை என்பதால் தடைவிதிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் வாதிடப்பட்டது.

இதையடுத்து இடைக்கால கோரிக்கை மீதான வாதங்களை இருதரப்பும் இன்று முன்வைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், இறுதி விசாரணைக்கான தேதி குறித்து இன்று முடிவுசெய்வதாக தெரிவித்தனர்.