• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வெண்ணிலா கபடி குழு’ நடிகர் ஹரி வைரவன் காலமானார்..!!

ByA.Tamilselvan

Dec 3, 2022

உடல்நல குறைவு காரணமாக நடிகர் ஹரி வைரவன் காலமானார். வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் ஆகிய திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளவர் ஹரிவைரவன். கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நடிகர் ஹரி வைரவன், இரவு 12.15 மணியளவில் உயிரிழந்தார். நடிகர் அம்பானி சங்கர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “வெண்ணிலா கபடி குழு திரைப்படப்புகழ் நடிகர் “ஹரி வைரவன் ” இன்று காலை 12.15 மணியளவில் இறைவனடி சேர்ந்தார். ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். ஹரி வைரவன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவர் தனது வாழ்வாதாரத்தை இழந்து குடும்பத்துடன் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் திரையுலகினர் பலர் அவருக்கு நிதி உதவி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.