• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று ஒருநாள் மூடல்..!

ByA.Tamilselvan

Dec 10, 2022

புயலால் முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற இருப்பதால் வண்டலூர் பூங்கா இன்று ஒருநாள் மட்டும் மூடப்படுவதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
மாண்டஸ் புயல் இன்று அதிகாலை 3 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நேரத்தில் 75 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இந்த புயல் காரணமாக சென்னை மற்றும் வட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நிறைய இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.
புயல் கரையை கடந்தாலும் இன்றும், நாளையும் மழை பொழியும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கோரத்தாண்டவம் ஆடிய மாண்டஸ் புயல் காரணமாக வண்டலூர் பூங்கா இன்று ஒருநாள் மட்டும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புயலால் முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற இருப்பதால் வண்டலூர் பூங்கா இன்று ஒருநாள் மட்டும் மூடப்படுவதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.