அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரியில் தமிழ்மேம்பாட்டுச் சங்க பலகை மற்றும் சந்தியா பதிப்பகம் இணைந்து பல்துறை சார்ந்த தமிழியல் கல்வியும், அறிவியல் முன்னேற்றம் என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் பன்னாட்டு கருத்தரங்க நிகழ்ச்சியை கவிப்பேரரசு வைரமுத்து துவக்கி வைத்தார்.

சென்னையில் முன்னனி உயர்கல்வி நிறுவனமான அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரியில் சென்னை பல்கலைகழகத்தின் தமிழ் மேம்பாட்டுச் சங்க பலகை மற்றும் சந்தியா பதிப்பகத்துடன் இணைந்து பல்துறை சார்ந்த தமிழியல் கல்வியும், அறிவியல் முன்னேற்றம் என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.
கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினராக திரைப்பட பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து தமிழியல் கல்வியும், அறிவியல் முன்னேற்றம் குறித்து தொகுப்பு நூல்களை வெளியீட்டு பேரூரையாற்றினார்.

இதில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழகத்தின் முன்னாள் துனைவேந்தர் முனைவர் இராசேந்திரன், இலங்கை தேசிய கல்வி நிறுவன தமிழ்மொழித் துறை இயக்குநர் முனைவர் முருகேசு தயாநிதி, சந்தியா பதிப்பகத்தின் உரிமையாளர் சந்தியா நடராஜன், ஏ.எம் ஜெயின் கல்லூரியின் இணை செயலாளர் ஸ்ரீ ஹேமந்த் சோர்டியா, டீன் முனைவர் ரம்யா, புலத்தலைவர் முனைவர் சுரேகா, துனைப் புலத்தலைவர் முனைவர் வெங்கட்ராமன் உட்பட முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள், மாணவ, மாணவிகள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கவிபேரரசு வைரமுத்து தொழில்நுட்ப கல்வியை தமிழில் கொண்டு வாருங்கள் எனவும் ஆங்கிலேயர் பொருட்களுக்கு தமிழ் சொற்கள் கொண்டு வருவதை விட புதிய பொருட்களை கண்டு பிடித்து தமிழில் பெயர் சூட்டுங்கள் எனவும் இதற்கு தமிழ்வழி தொழில் நுட்ப கல்வி வரவேண்டும் எனவும் தமிழில் படிக்க தமிழன் தயாராக இருக்க வேண்டும் எனவும் இன்று தமிழில் படித்தவர்தான் அனு விஞ்ஞானி ஏ.பி.ஜே அப்துல்காலம், நிலவில் விண்கலம் அனுப்பியவர் மயில்சாமி அண்ணாதுரை இவர்கள் அனைவரும் தமிழில் கலவி கற்றவகள் எனவும் உங்களுடன் பேசும் கவிபேரரசு வைரமுத்துவும் அரசு பள்ளியில் படித்தவர் எனவும் தெரிவித்தார்.













; ?>)
; ?>)
; ?>)