• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மத்திய அரசின் தொகுப்பில் இருந்து மாநிலங்களுக்கு கூடுதலாக தடுப்பூசிகள்

By

Sep 9, 2021 ,

மத்திய அரசின் தொகுப்பில் இருந்து மாநிலங்களுக்கு கூடுதலாக 96 லட்சம் தடுப்பூசிகள் விரைவில் வழங்கப்படும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை தடுப்பூசி போடும் பணி என்பது தற்போது வேகமெடுத்துள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் 1 கோடி வரை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு போதிய கொரோனா தடுப்பூசிகளை முன்கூட்டியே வழங்குகிறது. இந்நிலையில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களிடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது. மேலும் தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் இருந்து 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசு நேரடியாக கொள்முதல் செய்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி, மத்திய அரசின் தொகுப்பிலிருந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு 70,63,47,565 டோஸ்கள் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது மாநிலங்கள் வசம் 5,58,07,125 கோடி டோஸ்கள் தடுப்பூசிகள் இருப்பு உள்ளன. அதே நேரத்தில் கூடுதலாக மாநிலங்களுக்கு 96,25,760 டோஸ்கள் கூடுதலாக வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.